ஒரு நண்பனின் உண்மையான கடிதம்
உனக்காகவே பிறந்தேன்!
உன்னுடனே வாழ்கிறேன்!
நீ செல்லும் பாதையெல்லாம்
உன் நிழல் வருகிறதோ இல்லையோ
நான் வருகிறேன்!
அறிமுகமில்லாமல் அமைந்ததுதான்
நம் சந்திப்பு -இருப்பினும்
நம்மில் ஏதோ பிணைப்பு !
நான் வரும் பாதையெல்லாம்
நீ முட்களிட்டாலும்
பூக்களிட்டலும்
மனமுவந்து ஏற்று கொள்கிறேன்
மறுப்பேதும் இல்லாமல் !
சிந்தித்து பார்த்தால்
சிறந்த நண்பன் யாருமில்லை
என்னை போல உனக்கு !
இந்த மகிழ்ச்சியே போதும் எனக்கு !
நீ வெளியில் செல்லும்
போது எதை மறந்தாலும்
என்னை மட்டும் மறப்பதில்லை
உன்னுடன் அழைக்க!
இருந்த பொழுதும் ,
நான் உன்னுடன்
வரும் பொழுதெல்லாம்
என்னை அனுமதிப்பதில்லை
உன் வீட்டிற்குள்
இந்த வருத்தம்
மட்டும் மாறவில்லை
என்றும் எனக்குள்!............
ஆயினும்,
கன நேரம்
என்னை காணவில்லை
என்றாலும்
கண் கலங்கி விடுகிறாய்
இந்த நட்புக்காகவே
விழுந்து கிடப்பேன்
உன் காலடியில்
இந்த பிறவி முழுவதும்!
இப்படிக்கு
உன் நலம் நாடும்
-உன் செருப்பு .