யாரவது சொல்வார்களா?

எல்லா நாளிதழ்களும்
ஏதாவது ஒரு பயங்கரத்தை
சொல்லி விடுகிறது......

மாதத்திற்கு ஒரு முறை அல்ல
வாரத்திற்கு மூன்று முறை......

எல்லா தொலைகாட்சிகளும்
ஏதாவது ஒரு கொலையை
பற்றி சொல்லி விடுகிறது.......

வாரத்திற்கு ஒரு முறை
அல்ல மணிக்கு ஒருமுறை......

அலங்கரித்து காட்ட படுகிற
எல்லா செய்திகளும் கொலையை
பற்றியதாய் தான் இருக்கிறது.....

அனேக சிறப்பு செய்திகள் எல்லாமே
கொள்ளை போனதை பற்றியதுதான்.....

இயேசு சொன்ன அன்பு ஏதாவது ஒரு கத்தியில் ரத்தமாய் படிந்து இருக்கிறது .....

காந்தி சொன்ன அகிம்சை
யாரோ ஒருவரின் துப்பாக்கியில்
மறைத்து வைக்க பட்டிருக்கிறது...
அடுத்த துப்பாக்கி சூடு பற்றிய
செய்தியை கேட்டால் தான்
அது எங்கிருந்து பாய்ந்தது என தெரியும்.....

யாரிடமாவது சொல்ல முடியுமா?
இது காந்தி பிறந்த மண்ணென்று.....

யாரவது சொல்ல முடியுமா?
அடுத்து என்ன நடக்குமென்று.......

பார்த்துதான் நடக்க வேண்டி இருக்கிறது
அடுத்த பயங்கரம் என் பக்கத்து வீட்டிலும் நிகழலாம்.......

எழுதியவர் : ஜார்ஜ் அ (23-Feb-12, 9:03 pm)
பார்வை : 228

மேலே