குண்டக்க மண்டக்க
அரிசி ரூபாய்க்கு பசியில் ஏழை!!
பரிசு பொருள் தருகின்றனர் வாக்குக்கு
அவர்களின் கரிசனம் இல்லை மக்களுக்கு !!
கங்கையை கொண்டு வருவோம் மேடை பேச்சு
காவிரியை இணைக்க முடியவில்லை பல வருசம் ஆச்சு !!
முல்லை பெரியாறால் திண்டாட்டம்
முதுமலையில் யானைகளுக்கு கொண்டாட்டம்
பல்லவர்களின் சிற்பம் பாதுகாப்பில் நித்தம்
பாமரளின் கற்போ பாதுகாப்பாளரால் வருத்தம்
கள்ளிசெடி பூப்போல்
கிள்ளி தரும் சேவை
குழம்ப வைக்கும் அரசியல்
குண்டக்க மண்டக்க!!!