வாருங்கள்..பிரியா. பொள்ளாச்சி அபி
பெண்களுக்கென்றே
தனி உலகம் வேண்டும்
என்று கேட்டவள்
குடிகாரனின் மனைவியின்
புலம்பல் போல இருந்தது
இந்தக் கன்னியின் புலம்பல்
மடிக்கணிணி,சைக்கிள்,
தோட்டத்துப் பூக்கள் என
பிரியமாயிருந்தவளுக்கு
என்ன ஆயிற்றென்பது
புரியாதபுதிர்.
காதல் செய் காதல் செய்யென
நித்திரையிலும் சொல்லியவள்..
புரியாமலே நின்ற பெண்ணின்கதை
சொன்னவளை,
வழுக்கையாய்
யாராவது பொண்ணு பார்க்க
வந்தாங்களோன்னு தெரியலை.
எது சந்தோசம்னு கேட்டவளை
கவிதையெழுதாமல்
காலம் கடத்திவிடச் செய்தவன்,
தான் செய்த தவறினால் வெட்கப்படுகிறான்.
வாருங்கள்..பிரியா..உங்களுக்கு என்ன ஆயிற்று..?
வெகு நீண்ட நாட்களாக இந்தப்பதிவில்
உங்களைப் பார்க்க முடியவில்லையே.ஏன்.?