என் இதயம் ஒரு வெள்ளைத்திரை

கவிதை ஒரு நீரோடை
அங்கே
கற்பனையின் துள்ளல்
நீ வந்த போது

கனவு ஒரு வண்ணத் திரை
அந்த வண்ணங்கள்
நீ தந்த போது

என் இதயம் ஒரு வெள்ளைத் திரை
அதில்
காதல் ஓவியம் நீ வரைந்தபோது

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Feb-12, 5:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 226

மேலே