ஒரு பிச்சைக் காரன் சோ என்று மழை ---சமூகக் கண்ணாடி -1

அதுங்கிய அலுமினிய பாத்திரம்
டொக்கென்று விழுந்தது
நிக்கல் நாணயம்
எடுப்பதற்கு குனிந்தான் முதியவன்
மரத்தில் அப்படியே சாய்ந்தான்
கடைசியாக விழுந்த காசுடன்
கடைசியாக நின்றுபோனது மூச்சு
திடீரென்று சோ என்று ஏனோ மழை பெய்தது
ஆதரவற்ற அனாதைப் பிச்சைக் காரனுக்காக
வானம் அழுதது
----கவின் சாரலன்