வளரும் அன்னை தெரிசா ---சமூகக் கண்ணாடி --2

எறியப்பட்ட எச்சிலை
ஒட்டிக்கொண்டிருந்த
உணவுக்காக ஓடினான்
வயோதிகப் பிச்சைக்காரன்
இடையே வந்தது தெரு நாய்
இலையை இழுத்துச் சென்றது
நாயும் காக்கையும் உணவை
மாறி மாறி பகிர்ந்து கொண்டது
ஏமாந்த வயோதிகன் கண்களில்
கண்ணீர் வயிற்றில் பசி
பாதையோரத்தில் போய் அமர்ந்தான்

எங்கிருந்தோ ஓடிவந்தாள்
சீருடை அணிந்த பள்ளிச்சிறுமி
கண்ணீரை கைக்குட்டையால்
துடைத்தாள்
டப்பாவிலிருந்த தன உணவை
வயோதிகனுக்கு வாயில் ஊட்டினாள்
அருந்த நீர் கொடுத்தாள்
ஆதங்கத்துடன் பார்த்தான் முதியவன்
அழாதே தினம் வருவேன் தருவேன் என்று
அன்பில் அணைத்தாள் அன்னை தெரிசா

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Feb-12, 6:39 pm)
பார்வை : 231

மேலே