சினிமா.....
எங்கள் ஊரில் இருக்கும் வரை
உணவு
உடை
இருப்பிடம்
எல்லாம் இருந்தது....!
ஆறுதலுக்கு அம்மா இருந்தாள்!
ஆதறவுக்கு அப்பா இருந்தார்!
அதனாலே என் கனவெல்லாம்
சினிமாவாய் இருந்தது........!
சாதிக்க வேண்டுமென்று
சென்னைக்கு வந்தேன்....
இங்கே சினிமா இருக்கிறது
மேல் கூறியவை
தான் கனவாய் போனது.......!