வாழபிடிக்கும் உங்களுக்கு
துயரத்தை மிக உயரத்திற்கு சென்று
விட்டு விடு அது விழுந்து சாகட்டும் !!
மனதிடம் பலமுறை பேசி
பழகிகொள்ளு அது வியந்து போகட்டும் !!
நீ என்றால் என்ன
நான் என்றால் என்ன
குறிப்பிட வேண்டி நாம் படைத்த எழுத்து
துன்பம் இன்பம் லாபம் நஷ்டம்
எல்லாம் நம்மால் தோன்றியது
நாம் மட்டுமே இயற்கையால் தோன்றினோம்
நலிந்து போன வாழ்வு ஒரு நாள் பொலிந்து வர கூடும்
மலிந்து போன பொருளும் ஒரு நாள் மறைந்து போக கூடும்
மனிதா கலங்குவதுமேன் கண்ணீருக்கு கடிதம் வரைவதேன்
வாழ்கையில் பந்தியில் அமர்ந்து விட்டபின்
பாதியில் எழுவதுமேன்
துன்பம் வரும்போது துடைக்க பழகிகொள்ள
இன்பம் வரும்போது சிரிங்க பிறருக்கு
வாழபிடிக்கு உங்களுக்கு !!!