ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

மரணம் இல்லை
மக்களுக்காகப் போராடிய
போராளிகளுக்கு !

செலவற்ற
வரவு
புன்னகை !

வலிமை வாய்ந்தது
சிறந்த ஆயுதம்
அன்பு !

கண்டுபிடிக்கவில்லை
மருந்து
காதல் நோய் !


எங்கும் இல்லை
தமிழகம் தவிர
பச்சைக் குத்தும் தொண்டர்கள் !

ஓய்விலும் ஓய்வின்றி
உழைத்திடும் பெண்கள்
மாத விலக்கு !

வென்றவர்களுக்குப் புரியவில்லை
தோற்ற வர்களுக்குப் புரிந்தது
காதலின் அருமை !

ஏற்றத்தாழ்வு
உழைப்பதில்
கடிகார முட்கள்

நேரம் பார்த்து தோல்வி
நேரம் பார்க்காது வெற்றி
மூடநம்பிக்கை !

ஒரே மாதிரி
ஒருவரும் இல்லை
மனிதர்கள் !

அதிசயம்
ஆனால் உண்மை
உடலின் இயக்கம் !

தேவை சிக்கனம்
பயன்பாட்டில் இக்கணம்
மின்சாரம் !

அழகுதான்
கழுதை
குட்டியில் !

ஊழல்
உடன் பிறந்த நோய்
அரசியல்வாதிகள் !

இக்கரைக்கு
அக்கரைப் பச்சை
அரசியல்வாதிகள் !

மூலதனம்
பொய் வாய்
அரசியல் !

ஊ ழல் ஒழிக்க வந்தவருக்கு
பண விருது
ஊழல் ?

மக்கள் மறக்கவில்லை
இருவரையும்
காந்தி !கோட்சே !

பெரிய மனிதர்களின்
சின்னப் புத்தி
ஊழல் !

தன்னலம் மறந்து அன்று
தன்னலம் ஒன்றே இன்று
அரசியல் !

இறங்காதோ ?
ஏக்கத்தில் ஏழைகள்
விலைவாசி !

எழுதியவர் : இரா .இரவி (25-Feb-12, 9:11 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 280

மேலே