கலாச்சாரம்

கலாச்சாரம் என்பது வாழ்க்கை முறை
அதை போற்றி காப்பது உன் கடமை
நீ உண்ணும் உணவு
உடுத்தும் உடை மட்டும்
கலாச்சாரத்தை வெளிபடுத்தாது
உன் செயலும் சிந்தனைகளும்
உன் கலாச்சாரத்தை வெளிபடுத்தும்
உன் கலாச்சாரத்தை மிதித்து விட்டு
அந்நிய கலாச்சாரத்தை தழுவ மேடையேராதே
அந்நியனோடு நட்பு கொள் ஆனால்
அவன் கலாச்சாரத்தில்
உட்புகுந்து விடாதே
உன் கல்வியும் உன் வீரமும்
உன் கலாச்சாரத்தை வெளிபடுத்தும்
அதை வளர்த்துகொள்
தொன்றுதொட்டு உன்னை
பின் தொடர்ந்து வரும் அதை
மறந்து வேறு பாதை செல்லாதே
அதனோடு கைகோர்த்து நடந்தால்
நீ நடந்து வந்த பாதைகளும்
உன்னை பார்த்து பொறமை கொள்ளும்
உன் முன்னோர்கள் கட்டிய கோட்டையை
தகர்த்து விட்டு செல்லாதே
அதை மேன்மேலும் கட்டி
வானளவு கொண்டு செல்

எழுதியவர் : ஷெரில் (26-Feb-12, 12:30 pm)
சேர்த்தது : sheril
Tanglish : kalacharam
பார்வை : 253

புதிய படைப்புகள்

மேலே