உழைப்பு
பிறக்கும் முன்னே
கடவுளிடம் வரம் கேள்
இறக்கும் வரை உழைக்க
பலம் வேண்டும் என்று
உழைப்புக்கு கூலியாக வரும்
வியர்வை துளியே
உன் சோற்றுக்கு உப்பாகட்டும்
விடியலை சந்திக்க எழுந்திரு
விடிந்த பின் விடியலை தேடாதே
சோம்பலை முறித்து விட்டு
முயற்சியை தொடுத்தெடு
உன் கையால் உழைத்து பார்
உன் வலது கை உன்னை வாழ்த்தும்
உன் இடது கை உன்னை அணைக்கும்
உன் சொந்த காலில் நின்று பார்
ஊரே ஒற்றை காலில் தவம் இருக்கும்
உன்னை பார்க்க