திருமண பயிர் வாழ்த்து
அன்பு பணிவு பாசக்கலவையில்
ஆனந்தம் என்னும் அரணமைத்து
இனிய இல்லற விதையிட்டு
ஈகை குணமென்னும் நீர் தெளித்து
உண்மை உழைப்பால் பண்படுத்தி
ஊக்கம் குன்றா உரமிட்டு
எந்நாளும் அதனை பாதுகாத்து
ஏற்றம் பல காணும் செடி வளர
ஐயம் தீமை எனும் களை பறித்து
ஒற்றுமை சேர் கனி பறிப்பீரே
ஓங்கு புகழுடன் வாழ்க வாழ்கவே!