புவிப்பந்தே புரண்டு போகாதிரு!

புவிப்பந்தே !
பூப்போட்டு பூஜிக்கிறேன்
பூப்போல சுற்றுவதற்காய்

சில நேரங்களில் சில வேளைகளில்
விரும்பிப் பார்க்கிறேன்
நீ புரண்டு போக வேண்டுமென்று

காரணம் கேட்கிறாயா ?
ஜாதி வெறியின் இரத்தத் துளிகள்
உன் மீது பனித்துளிகளாய்,,,,,,,,,,,,

வர்க்க பேதங்களால் மனிதர்கள்
ஆதிகால பூமி போல் நிர்வாணமாய் ........

வாழ்விக்க வேண்டிய இளைஞர்கள்
கலாச்சார சீரழிவுகளில் ...................

மனிதநேயங்கள் மாண்டு போயின
சில பெரிய மனிதர்கள்
சவக்குழிக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள்

புவிப்பந்தே புரண்டு போகாதிரு
உன்னை நாங்கள் பொன்னாக்குகிறோம்

கவிஞர்களே ! எழுதுங்கள்
அவனை எழுப்புங்கள்
விடிவெள்ளி அருகில் இருப்பதாய்
விபரம் சொல்லுங்கள்

எரிமலையின் சாரலிலே
எமனுக்குப் பயந்தவர்கள்
நமக்குத் தேவையில்லை

எடுத்த சபதம் முடிப்போம்
எழுந்து நிற்போம்
சரித்திர வானத்தை
வாழ வைப்போம் !

எழுதியவர் : porchezhian (26-Feb-12, 6:47 pm)
சேர்த்தது : porchezhian
பார்வை : 212

மேலே