நீ

உன்னைப்போல் இங்கு எவருமில்லை
நேற்றும் இல்லை
நாளையும் இல்லை
வேசங்கள் எதற்கு அடுத்தவர் போல்
அறிந்துகொள் நீ யார் என்று
முகமூடி உதிர்த்தால் உன்முகம் தெரியும்
தோல்விகள் இனி படிகளாய் மாறும்
வலியும் இங்கு வலிமைக்கே
யார் சொன்னார்
வாழ்க்கை போராட்டம் என்று
மழலை நடைபோடு
விரும்பி விளையாடு
வாழ்வின் பரிசுகள் இனி
என்றும் உன்னோடு .

எழுதியவர் : லெனின் (27-Feb-12, 1:59 pm)
Tanglish : nee
பார்வை : 208

மேலே