பெண்
பெண்ணே நீ ஒருத்தி!
பெண்ணே நீ ஒரு தீ!
அறியாமை இருளை
அகற்ற வந்த
தீப் பிழம்பு!
அங்ஞான நெறியை
விரட்ட வந்த
அறிவொளி பிழம்பு!
மடமை குணம்
கொண்டோரை
அழித்தெழுந்த
அக்னிப் பிழம்பு!
காலம் மாறியது உன்
கோலமும் மாறியது!
உன்னை மிதித்த மூடர்கள்
உன்னை மதிக்கும் காலமிது!
மண்ணில் நடக்கவே
தயங்கினாய் அன்று...
விண்ணில் நடைபழகுகிறாய்
இன்று!
ஏடெடுக்கா கைகள்
அன்று...
ஏரோபிளைனும்
உன் இயக்கத்தில்
இன்று!
உன் கையில்
கஞ்சி சட்டி
அன்று...
கம்பியூடர் பெட்டி
இன்று!
வளரும்போது சிலர்
சிறப்படைவர்...
பிறக்கும்போதே
மகாலட்சுமி என
சிறப்படைவது
உன் குலம்
மட்டுமே!
பூமிக்கு வரமாய்
வந்த உன்னிடமே
வரதட்சனையா!
வஞ்சக இளைஞரிடம்
மனதை கொடுக்காதே!
விடியலும் உன்
வாசல் தேடும்!
நற்கனவுகள் உன்
கரம்பற்ற காத்திருக்கும்!
வெற்றி உன்
பாதம் தேடி
ஓடி வரும்!
உன்னுள் பிறந்த
அத்தனை உயிர்களின்
வாழ்த்துக்களும்
உன் தோளில்
மாலைகளாக!!!