கைகுட்டை கைகுட்டை

நாகரிக மனிதனின்
அடையாளம்!

யுவதிகளின்
உதட்டு சாயத்தின்
ஊர்கோலம்!

எங்கள் கூட்டனி
நடிகையின் மானம் காக்கும்!

மனிதனால் துண்டிலிருந்து
துண்டாக்கப்பட்டோம்..!

மழலையோடு பள்ளி செல்வோம்!
கசங்கி போகும் கண்களோடு
கசங்கி போவோம்!

ஆனந்தம் என்றால்
கடைசியில் இருப்போம்!
ஆபத்தில் உதவும்
நண்பனாய் இருப்போம்!
மற்றவர் மீது கரைபட்டால்,,
நாங்கள் ஏற்போம்!!!

எழுதியவர் : விமல் இனியன் (27-Feb-12, 4:19 pm)
சேர்த்தது : vimal iniyan
பார்வை : 425

மேலே