என் அன்பு தோழியே

எங்கிருந்தோ வந்தவள்
என் உயிரில் சரிபாதி ஆனவள்.

இருள் என்னை சூழ்ந்த போது விழியில் ஒளி தந்தவள்.

கவலை என்னை கட்டிப்போட்டபோது அன்பால் அதை அவிழ்த்து விட்டவள்.

தவறொன்று நான் செய்தால் அதை தட்டி கேட்டு திருத்துபவள்.

தவறாக யாரும் எனை பேசினால் அதை தாங்கிக் கொள்ளாதவள்.

எழுத நினைக்கிறேன் உன்னை பற்றி.

கடல் என்று சொல்ல நினைத்தேன். அது உன் அன்பை விட சிறிதாயிற்றே.

தென்றல் என்று சொல்ல நினைத்தேன். அதை விட மென்மை உன் உள்ளம் ஆயிற்றே.

விண்ணோடு ஒப்பிட நினைத்தேன். பறந்து விரிந்த உன் பாசம் அதை விட பெரிதாயிற்றே.

முகிலோடு முடிச்சுபோட நினைத்தேன். முகிலை விட மூமடங்கு உயர்ந்ததடி உன் நட்ப்பு.

எப்படி உன்னை நான் பாட. எதோடு உன் நட்ப்பை உவமை படுத்த.

என் பேனா மை காய்ந்துப்போனது.
கசக்கிப்போட்ட காதிதங்கள் கோபுரமானது.

ஏனோ வார்த்தைகள் மட்டும் கிடைக்கவில்லை.

மன்னித்து விடு என் அன்புத் தோழி உன்னை வடிக்க தமிழில் வார்த்தை போதவில்லை எனக்கு.

கம்பனோ, காளிதாசனோ, இருந்திருந்தால் கை காலில் விழுந்தாவது வார்த்தைகளை கடன் வாங்கி இருப்பேன் என் இனியவளே உனக்காக.

அவர்களுக்கும் அதிர்ஷ்ட்டம் இல்லையடி என் அன்புத் தோழி உனை பாட.

நிறம் மாற நட்புடன் - அன்புத்தோழி லலிதா.வி

எழுதியவர் : லலிதா.வி (29-Feb-12, 12:28 pm)
பார்வை : 1211

மேலே