குப்பைத்தொட்டியில் குழந்தை

காதல் என்ற போதையிலே.
பாதை தவறி போனவரே.

காதலன் என நம்பி
காமுகனிடம் சிக்கியவரே.

கலவி என்ற சுகம் கண்டு
கற்ப்பிழந்து போனவரே.

கொண்டவன் கை கழுவ
கலங்கி இதயம் வெடித்தவரே.

கற்பு என்பது சொல் அல்ல
காலத்திற்கேற்றார் போல் மாற்றிக் கொள்ள

காமம் என்ற ஒரு சொல்லில்
உலகம் அது இயங்கவதில்லை.

தெரிந்தே நீங்கள் செய்யும் தவறுக்கு.
தண்டனை பச்சிளம் குழந்தைக்கு.

தொப்புள் கொடி அறுத்த உடனே
சேயுடனான பந்தத்தையும் அறுத்தீரோ.

எச்சில் இலைகளுடன் எதிர்க்காலம் புரியாமல்
கண் சிமிட்டி சிரிக்குதடி நீ தூக்கி எறிந்த உன் பிள்ளை.

உன்னை விட உயர்ந்ததடி உன் பிள்ளையை காத்த குப்பை தொட்டி..

கை விட்டு போகும் முன் அதன் கண்ணழகை பாரடி.

அள்ளி எடுத்து அரவணைக்க வேண்டாம் அநாதை இல்லத்திலாவது சேரடி.

எழுதியவர் : லலிதா.வி (29-Feb-12, 7:44 pm)
பார்வை : 6137

மேலே