122 - காற்றில் எழுதிய கவிதைகள் ...
பூவைத் தடவும் முன்னே
சீவு..
முள்ளினை..
நோவைக் குறைக்கும் முன்னே
சீவு..
ஊழலை..
**
உன் வீட்டுக்
குப்பைகளை
வெளியே வீசினாலும் வீசு..
உன் கவலைகளை
வெளியில் வீசாதே!
**
வியக்காதே
உன்னைக் கண்டு..
மயக்காதே
பொய்யைக் கொண்டு ..
**
சிந்திப்பவனுக்குத்
தோல்வி இல்லை..
நிந்திப்பவனுக்கு
வெற்றி இல்லை..
**
விழுந்து விழுந்து எழுபவன்
மனிதனாயிருக்கலாம்..
எழுந்து எழுந்து விழுபவன்
மடையனே ..
**
நீ தூசாக விழுந்தாலும்
பரவாயில்லை..
அடுத்தவன்
கண்ணில் தூசாக விழாதே..!
**
என்
சுவாசத்தைக்
கொடுத்து வந்து மாற்றாய்
உன் வாசத்தைத்
கொடுத்ததடி காற்று!
**
என் கண்ணில் வழிகின்ற
நீரால்
உன் மேலே போழியுதடி
தூறல்..
**
இரவெல்லாம் மழை..
வீட்டுச் சிறையில்
என்னவளாம்..
**
வானத்தில் ஓட்டையா..
என்னவள் எறிந்த
வளையலடா..
**
இப்பொழுதெல்லாம்...
இரவு வந்தால் கனவு வருகிறது..
கனவு வந்தால் நீ வருகிறாய்..
ஆமாம்..
கனவு மெய்ப்பட வேண்டும் என்கிறார்களே
அது எப்போது..
**