மூச்சுக் காற்று
ஜன்னலில் நுழைந்த காற்று
மழைக்கு முன்னே
வருவது போலே
என்னைத் தழுவி
என்னுள் நிறைந்தது !
காலைக் கதிரவன்
பார்த்தது - பனியுடன்
மாலை மலரை
முகர்ந்தது - முள்ளுடன் !
பகலில் பள்ளம்
இரவில் மேடு
இரண்டும் சமமே
என்றும் சுகமே !
உள்ளே வெளியே
ஒன்றா இரண்டா
ஒவ்வொரு நாளும்
ஒராயிரம் முறைகள் !
ஒரு நொடி - ஜனனம்
மறு நொடி - மரணம்
ஒவ்வொரு நாளும் - புதினம்
ஒரு வழிப் பாதை - பயணம் !
பூவில் மணமும்
கலந்தது போலே
என்னுடன் என்றும்
கலந்தே இருப்பது !
என்னுடன் நீ
இருப்பதனாலே
என்னுடல் - என்னுடன் !
என்னுடன் நீ
இல்லையென்றால்
என்னுடல் - மண்ணுடன் !
ஜன்னலில் நுழைந்த காற்று
மழைக்கு முன்னே
வருவது போலே
என்னைத் தழுவி
என்னுள் கறைந்தது ...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
