நாள்

வண்ண உடையுடன்
வாசலில்
வண்ணத்துப்பூச்சி ...
விளக்கை
ஏற்றி அணைக்கும்
வித்தியாச விட்டில் ...
விட்டு விட்டு
ஒளிரும்
மின்மினி ...
ஞாயிறு திங்கள்
விளையாட்டால்
விழும் விக்கெட்...
ஊரை சுற்றும் பூமி
தன்னைச் சுற்றி
எறிந்தது...
கருப்பு வெள்ளையில்
உலா வரும்
கட்சிக்காரன்...
தப்பாமல்
கதவுதட்டும்
தபால்காரன் ...
இறக்கும் வரை
ஏற்றிச் செல்லும்
தொடர்வண்டி ...
பிறந்த அன்றே
இறந்து விடும்
ஈசல் ...