சோகமே நீ சுகமா?

சோகமே நீ சுகமா?

விடியலின்
முதல் வேலை
புகைப்படத்துடன்
காகிதமும்...
எழுதுகோலும்...

இரண்டு நிமிடத்தில்
கடும் போராட்டம்
காகிதங்கள் நிறைந்தன!

தேக்கப்பட்ட அணையில்
திறக்கப்பட்ட மடைபோல்
கொட்டுகின்ற வார்த்தைகள்
வேதனைகளாய்...

சொல்ல முடியாத
இன்ப வேதனைகள்
எழுத்துக்களாக
காகிதத்தில் கொட்டியிருக்கும்...

முடிக்கப்பட்ட காகிதம்
முற்றுப்பெறாத வார்த்தைகளோடு
மடிக்கப்பட்டு...
மடித்து கிழிக்கப்பட்டு...


அஞ்சல் ஆனது
பெட்டியில் அல்ல!
குப்பைத் தொட்டியில்...
அவள் நினைவு
எழும்போதெல்லாம்
மனம் ஆறுதல் அடைவது
இப்படித்தான்...

சோகம் கூட
சுகம் தான்!
அவளோடு இல்லையெனினும்
அவள் நினைவுகளோடு
போராடுவதில்..!

எழுதியவர் : விமல் இனியன் (3-Mar-12, 11:39 am)
பார்வை : 280

மேலே