காதல் ஒரு கல்லறை

உன்னோடு வாழ நினைத்த
என் வாழ்க்கையோ
மண்ணோடு மட்டுமில்லாமல்
என்னோடு புதைந்து போனது

உன்னையே நினைத்து -நானோ
கல்லறையில் உறங்குகிறேன்
எல்லாவற்றையும் மறந்து -நீயோ
மணவறையில் அமர்கிறாய்

எப்படி பெண்ணே!!
உன்னால் மட்டும் முடிந்தது
என்னை காதலித்து விட்டு
வேறு ஒருவனுக்கு தலை நீட்ட

காதல் ஒரு கல்லறை தான்
எல்லாவற்றையும் மறந்து
மண்ணோடு புதைவதால்
என்னை போல....

எழுதியவர் : மணிமாறன் (9-Mar-12, 1:27 pm)
பார்வை : 285

மேலே