வெங்காயக் காதல்
வெங்காயக் காதல்
வேணாம் நமக்கு
பேருந்தில் நிற்கையில்
பூங்காவை ரசிக்கையில்
வரும் சகிக்க முடியா வாசத்தால்
வெங்காயக் காதல்
வேணாம் நமக்கு
உரிக்க உரிக்க
ஒன்றுமில்லாததால்
உரிக்கும் போதே
கண்ணீர் கொடுப்பதால்
இந்தியப் பண்பாடு ஏற்க்காததால்
வெங்காயக் காதல்
வேணாம் நமக்கு ...!