மழைத்துளி வாழ்க்கை...
வெய்யில் தாழ்ந்த
மாலைநேரம்
மனதுடன் கைகோர்த்து
பாதையில்
கவலையுடன் கால்பயணம்..
எவ்வளவு சுமையானது
இந்த வாழ்க்கை-
பணம் பொருள் வளம்
அதிகாரம் வளர்ச்சி
தேவை எதிர்பார்ப்பு
என எத்தனை சுமைகள்..
ஆதிவாசியாய்
ஆதாமும் ஏவாளும்
எப்படியிருந்திருப்பார்கள்.?
திடீரென-
நுரையீரலில் புத்துணர்வு
செல்கள் சிலிர்த்துக்கொண்டன
என்னைச் சுற்றி-
வானம் மங்களாய் சிரிக்க
அண்ணாந்து பார்த்தேன்
அங்குமிங்குமாய்-
அலைந்துகொண்டன மேகங்கள்..
பூமிக்கு நீராட்டுவிழா
நிச்சயம்..
ஆவளோடு நோக்கினேன்
முதல் துளிக்கு முகம்காட்டி..
கணநொடியில்
கனவு மெய்த்த்து-
முதல் மழைத்துளி
முத்தாய் என் முகத்தில்
பட்டுத்தெரிக்கையில்-
ஆஹா
எத்தனை ஆன்ந்தம்
எத்தனை பரவசம்...
உணர்ந்து கொண்டேன்-
சுகமானாது
மழைத்துளி மட்டுமல்ல
ரசித்தால்-
வாழ்க்கையும்தான்...