நட்பே நட்பே..!!

நாட்கள் கூடக்கூட
நம் நட்பின் வட்டம் கூடட்டும்
தினங்கள் செல்லச் செல்ல
நம் நட்பு மென்மேலும் வளரட்டும்
வருடங்கள் சேரசேர
நம் நட்பு இன்னுமின்னும் மலரட்டும்
உலகே நட்பால் சுழலும்
உலகெங்கும் நட்புத்தோட்டம் பெருகட்டும்!
நண்பர்களின் உலகே
நாளைய நல்லுலகமாகட்டும்..

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (12-Mar-12, 10:13 am)
பார்வை : 504

மேலே