தன்னம்பிக்கை ...

கனவுகளில் மயங்கி
காலத்தை வீணாக்கும் இளைஞனே...

விழித்துப்பார்
விழுதுகளில் ஏறும் சிலந்தியை...

சறுக்கி சறுக்கி
பின்வாங்கினாலும்
தன்னம்பிக்கையோடு
பயணிக்கும் சிலந்தியை லயித்துப்பார் ...!

உன்னை எழுப்ப
கூரைமேல் காத்திருக்கிறது சேவல்
விழி இளைஞனே ... விழி

விழுந்து விழுந்து எழும்
சிலந்தியிடம் பாடம் கற்றுக்கொள்...

ரயில் பெட்டி பயணமாய்
உணவுகளை சேமிக்கும் எறும்புகளைப்பார் ...

ஆறறிவாய் நீ இருக்க
ஐந்தறிவிடம் பாடம் கேட்கலாமா ...?

விழி இளைஞனே ... விழி
நீ விழித்தால் வெற்றி
தொட்டுவிடும் உயரத்தில் தான் ...!

எழுதியவர் : வெற்றிநாயகன் (11-Mar-12, 7:33 pm)
சேர்த்தது : மு முருக பூபதி
பார்வை : 392

மேலே