!!! உரிமையை மீட்போம் வாடா தமிழா !!!

வாளேந்தி வாடா தமிழா
வாழ்வுரிமையை
மீட்டெடுக்க...

அமெரிக்க ஆதரவு மடலில்
நமக்கான வாழ்வுரிமை இல்லை
அதைகிழித்து தீயிலிட்டு
தீபந்தம் ஏந்தி வாடா...

அதர்மங்களை அறுத்தெடுத்து
அக்கினியில்
இடுவோம் வாடா...

நரிகளை நம்பியது போதும்
புலிகளாய் பாய்ந்து வாடா...

உலகெல்லாம் போர் முரசொலிக்க
உரிமையை மீட்போம் வாடா...

கொடுங்கோலான் குரல்வளையறுத்து
குருதியை குடிப்போம் வாடா...

ராவண மண்ணை மீட்டு
நாய்களை விரட்ட வாடா...

பிணங்களை தின்னும் சாத்தான்
குடல்களை உருவ வாடா...

காமுகனின் கருவை சிதைத்து
கடலிலே வீசிட வாடா...

கொலைகார குலத்தை கொன்று
காளிக்கு விருந்திட வாடா...

சதிகார கும்பலை சரித்து - தமிழ்
சமுதாயம் அமைத்திட வாடா...

சிங்கள வெறியனை அழிக்க
சிறுத்தையாய் சீறி வாடா...

அதிகார வர்க்கத்தை ஒழித்து
அறத்தினை விதைப்போம் வாடா...

ஏகாதிபத்திய கனவை
எட்டி மிதிப்போம் வாடா...

சதிகார சட்டத்தை மாற்றி
சரித்திரம் படைப்போம் வாடா...

புஜங்கள் புடைக்க - கண்
நெருப்புகள் தெறிக்க
தடைகளை உடைக்க - தமிழ்
மண்ணை மீட்க
ஆயுதம் ஏந்தி வாட - நாம்
அடிமைகள் இல்லை தோழா...

இடிகள் முழங்க
அண்டம் நடுங்க
படைகள் சூழ வாடா - நம்
வீரத்திற்கென்ன கேடா?...

தீயை தீக்கரையாக்கி
புயலை புருவத்தால் தாக்கி
வர்ம பிடியினை போட்டு - அந்த
அநியாய கதவினை பூட்டு...

உயிருக்கு துணிந்து நின்று
ஆணவ வர்க்கத்தை கொன்று
சிங்கள கொடியை அறுப்போம்
புலிக்கொடி பறக்க விடுவோம்...

உலகத்தமிழனின் கோரிக்கை
உலகநாடுகளுக்கு வேடிக்கை - தமிழன்
யாரென்று காட்டிடுவோம்
ஒன்றாய் சேர்ந்து உயர்த்து கை...

வேண்டும் எமக்கு நீதி
உறங்காதே கண்களை மூடி - நீ
எழுந்து வா
உரிமையயைத்தேடி...

நீதி கிட்டும்வரை விடமாட்டம்
மாற்றான் காலில் விழமாட்டோம்
பேரினவாதத்தை தொழமாட்டோம்
உரிமையை யாருக்கும் தரமாட்டோம்...

எதற்கும் துணிந்து நிற்கின்றோம்
எரிமலை பிழம்பாய் வெடிக்கின்றோம்
உரிமைக்காக துடிக்கின்றோம்
உயிரை மண்ணில் விதைக்கின்றோம்...

தீர்ப்பை திருத்தி எழுதிடுங்கள்
தீமையை தீயில் கொளுத்திடுங்கள்
உறையிலிருந்து வாளுருவ
ஒருநொடி போதும் நினைத்திடுங்கள்...!!!

குறிப்பு;. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள வலுவிழந்த தீர்மானத்தை என்னியதால் வந்த வரிகள்...

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (15-Mar-12, 4:00 pm)
பார்வை : 1552

மேலே