மணமகன் தேவை....!
பத்திரிகைகளில்
பல பக்கம்கள்
நிறைந்து வருவது
என்னவோ மாப்பிள்ளை
பொண்ணு வேணும் என்கிற
விளம்பரம் தான்....!
அங்கே சொல்லப்படுவதும்
கேட்கப் படுவதும்
சேர்ந்து வாழக்
கூலியும்.....வாழும்போது
அனுபவிக்க பெத்தவங்க
உழைப்பும் தான்....!
சாதி சொல்லி
பாதிப்பேரு
பேப்பரில பொண்ணு கேட்கிறான்....
இதில் பதிப்பு
என்னவோ மீதிப்
பேருக்குதான்....!!