பொள்ளாச்சி சந்தை புண்ணாக்கு திருநெல்வேலி அல்வா --கவின்
பொன்னுக்கு ஒரு காலம் உண்டென்றால் புண்ணாக்கிற்கும் ஒரு
காலம் உண்டு என்பதை உங்கள்
கவிதை மூலம் தெரிந்து கொண்டேன்
மண்ணாங் கட்டிக்கு புண்ணாக்கு தேவலை ஆனால் மண்ணாங் கட்டி
தத்துவம் பேசும் எப்படி ?
மண்ணுல பிடிச்ச மண்ணாங்கட்டி
மனுஷன்னு பேர் வச்சி
தொட்டிலில் போட்டு
சீராட்டிப் பாராட்டி வளர்த்தாலும்
கடைசியில் கால் இல்லாக்
கட்டிலில்தான் போனும் ஒருவாட்டி
கட்டையில்தான் எரியனும் தீ மூட்டி
பார்த்தீங்களா மண்ணாங்கட்டி
சித்தர்கள் தத்துவம் பேசுது
புண்ணாக்கு மகிமையை பார்ப்போமா
புண்ணாக்கே புண்ணாக்கே
நீ மாடு தின்னும் சாக்லேட்டோ
மார்கெட்டிலே புதுசா வந்திருக்கும் மாட்டோபரி சாக்கலேட் நீ தானோ
ஜியாமெட்டிரியின் எத்தனை எத்தனை
வடிவங்கள் உனக்கு
பென்டகன் செக்சகன் ஆக்டகன் என்று
புண்ணாக்கே கணக்கிலும் புலி நீ தானோ
பருத்திக் கொட்டையோடு
புண்ணாக்கை கலந்து வச்சா
பருத்திக் கொட்டையும்
மாட்டுக்கு திருநெல்வேலி அல்வாதான்
என்பது பாட்டியின் பழைய வாக்கு
கவிதையில் கலந்து மணக்கும்
புண்ணாக்கே வடிவங்களுடனும்
வண்ணங்களுடனும் நீ வாழ்க
உனக்காக ஒரு பாட்டு
பொதியை ஏற்றி வண்டியிலே
பொள்ளாச்சி சந்தையிலே
புண்ணாக்கை
விருதுநகர் வியாபாரிக்கு வித்துப் போடு
செல்லக்கண்ணு
நீயும் வித்துப்போட்டு பணத்த எண்ணு
சின்னக்கண்ணு
அட என்றா பாக்றே
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு: பொள்ளாச்சி அபியின் புண்ணாக்கு
கவிதைக்கு நான் கொடுத்த திருநெல்வேலி
அல்வா