உன் விழி சுடுவதேன்?

முதன் முதல் காட்சிகளை
விளக்கியதுன் கண்கள்

நான் உலகை ரசிக்கத்
தூண்டியதுன் கண்கள்

வாழ்க்கை பாதையில் மேடுபள்ளம்
காட்டியதுன் கண்கள்

கண்களின் பயனை புரிய
வைத்ததுன் கண்கள்

என் வாழ்வின் அங்கமும்
உன் கண்கள் தான்

நம் உறவை எண்ணுகையில்
கண்ணீர் மழையும் உடல் நனைத்தது

அன்று...

ஆனால் இன்று?

கண்களை தாண்டும் முன்
காணாமல் போனது கண்ணீர்

வியர்வை உடையை நனைக்கிறது
நான் உன் கண் முன் தோன்றுகையில்

என் வாழ்கையில் குளங்கள் வற்றின

சந்தோஷ மீன்கள் உயிர்விட்டன

மாற்றான் தவறுக்கு
என்னை வெறுப்பது நியாயமா?

அன்பே உன் கோபத்தை குறை

வழிகாட்ட விழிகள் வேண்டும்
சூட்டால் அடுப்பெரிக்க வேண்டாம்

சூரியா.......

எழுதியவர் : ஜெ.நாகபாண்டி (20-Mar-12, 9:57 pm)
சேர்த்தது : ஜெ. நாகபாண்டி
பார்வை : 629

சிறந்த நகைச்சுவைகள்

மேலே