அருகம் புல் மாலை

பறந்து விரிந்த
பசுமைப் புல்வெளி
பார்ப்பதற்கு அழகோ அழகு.....

பதுங்கிக் கிடந்த
பச்சை அருகம் புல்
பழகிப் பார்த்தேன் பண்போ பண்பு....

குடித்தால் உடல் நலம் - வைத்து
கும்பிட்டால் மன நலம்

அழகா ? அருளா ?
அருளே பெரிது......

அருகம் புல்லை அள்ளிப் பறித்து
அழகு கணபதிக்கு சூடி மகிழ்ந்தேன்

எழுதியவர் : (21-Mar-12, 12:18 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 272

மேலே