" நான் குழந்தை விரும்பி "

" இரண்டு வருடம் முடிந்த மழலைப்பூவே
என் உயிரில் கலந்த
அன்பு தீவே !.. காலம் ஓடுகிறது நித்தம்
உன்னுடன் நான் இருந்த
தருணங்கள் மட்டும் என் நினைவில்
இருந்து கரைய மறுக்கிறது!..
உன்னை பார்க்க ஓடோடி வருகிறேன்
அதற்கு முன்பு நீ
இல்லா நாட்களில் என் வருடலை
சொல்கிறேன் !...செப்டம்பர் மாதம் தொலைத்தேன் எனது
பொக்கிசத்தை - அது தான் உன் பிரிவு
நான் எப்படி சொல்வேன் அதை, உன்
முகம் காண என் உதிரம் சிலிர்க்கும்
ரகசியத்தை - அது தான் உன் சிரிப்பு
சொல்ல மறந்துவிட்டேன் மறைத்து
வைத்தாலும் அதை அடம்பிடித்து
அடைய நினைகும் கண்ணில் நீரிலா
அழுகையின் அதிசியத்தை - அது தான்
உன் "வரையறை அற்ற உவமை"


அக்டோபர் மாதம் பேருந்தில் பார்த்தேன்
ஒரு குழந்தை அன்றிரவு தொலைந்தது
என் உறக்கம், உன் நினைவில் வருடியது
என் உடல் இறக்கம்.. மறு நாள் இரவு
தொலைபேசியில் உனது மழலை
மொழி கேட்டேன் இளைத்த என்
உடலும் தொலைந்த உன் நினைவும்
மலர்ந்தது ஒரு படி மேலே !...


நவம்பர் மாதம் மழைக்காலம்,
என் நினைவோட்டம் என்றும்
உன் மழலைக்கோலம்!.... என்
நடைபாதை பயணத்தில் யாரோ-
தூரத்தில் " சூரியா" என்று
அழைக்கையில், எனைமறந்து ஏனோ
நனைகிறேன் உன் நினைவுச்சராலில்...


டிசம்பர் மாதம் வேட்கிறது எனக்கு
நித்தம் குளிரில் நீ நடுங்க.. அன்பெனும்
போர்வைக்குள் உன்னை என்றுமே
அன்னையும் தந்தையும் சூழ்ந்திருக்க
கொஞ்சம் ஈர காற்றில் நனைந்து
சிலிர்கிறது என் தேகம் !.

ஜனவரி மாதம் இரண்டாவது வாரம்
அட நீ என்னை மறந்து இருப்பாயோ
என்ற அச்சத்தில் உன்னை காணா
உன் வீ டேறி நான் வர , என்னை
கண்டு நீ - பாலாக்கனி தாவி தேனில்
விழுவது போல் என் தோளில் நீ ..
ஏனோ அத்தருணம் நான் புதியதாய்
பிறந்ததொரு தருணம்..


பிப்ரவரி மாதம் நாட்கள் குறைவுதான்
ஆனால் உன் நியாபக கீற்றலையின்
அதிர்வெண்ணின் ஆதிக்கம்
அதிகமானதுடா !.. அதனால் ஏனோ
உன் நினைவு தீண்டுகையில் இமை
மூடி எனை மறந்து காற்றின்
அலைவரிசியில் கேட்கிறேன்-
முற்பொழுதும் உன் கற்பனையில்
என்ற படத்திலிருந்து "கண்கள் நீயே
காற்றும் நீயே" என்ற பாடலை!..

மார்ச் மாதம் எனக்கு பிடித்த மாதம்
ஏனால் இப்பூமியில் நீ பிறந்த மாதம்
மேலும் முதல் அடி எடுத்து வைத்த
உன் பூ பாதமும் இம்மாதமே !.. மார்ச்
இரண்டு மூன்றில் உன்னை வாழ்த்த
ஓடோடி வருகிறேன் உனது அன்பில்
விழுந்த அன்பானவன் !....

" வாழ்க வளமுடன்" - ஜெயசூர்யா

எழுதியவர் : dhamu (21-Mar-12, 5:45 pm)
பார்வை : 267

மேலே