மரங்களுக்கான எனது கூக்குரல்கள்.... திருப்பூர் முருகானந்தன்
*** ஒரு நண்பனை இழக்க 100 முறை யோசி
ஒரு மரத்தை இழக்க 1000 முறை யோசி
*** ஒரே நேரத்தில் மனித குலம் முழுமைக்கும் உதவ
ஆசைப்படுகிறாயா...? ஒரே ஒரு மரத்தை நட்டு வை !!!!
*** மரங்கள் , ஆக்சிஜன் அம்மாக்கள்.. !
*** இறைவனை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்..
மரங்கள் தலையாட்டி ரசிக்கின்றன
இருப்பு ....இல்லாததில் தேடுவதுதானே...??
*** வானத்திற்கும் ,பூமிக்குமான ஒரே தொலைத்தொடர்பு
மரங்கள் மட்டுமே... இந்த டவர்களையெல்லாம்
வெட்டிவிட்டுவிட்டு... மழைச்சிக்னல் கிடைக்கவில்லை
யென்று ஏன் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்..?
*** குழந்தையில்லாத வீடு பாழ்...
மரமில்லாத ஊர் பாழ்
வனமில்லாத நாடு பாழ்...
மழையில்லாமல் மொத்தமும் பாழ்.. !