ஈழத் தமிழச்சி...!!!
சோறு வடிக்கும் முன்- அவளிடம்
குழம்பாய் கொதித்தது செய்தி;
உழவு வேலைக்கு சென்ற கணவன்
இழவாய் போனான் என்று..!
பதறியடித்துக்கொண்டே ஓடினாள் ;
பிள்ளைத்தாச்சி தானே ;
முடியவில்லை அவளால்..!
இடுப்பின் வலியோ அதிகமாக
ஏற இறங்க வாங்கியது மூச்சு..!
எப்படியோ வந்தடைந்தாள் தன் தலைவனிடம்..!!!
கண் எதிரே தன் இதயம் துடிக்க
கைப்பற்றி விழுந்தாள் கணவனிடம்...!!!
இறப்பை நெருங்கும்
கணவனை நினைத்து அழவா ?
பிறக்கப் போகும் குழந்தை நிலை கண்டு அழவா?
அய்யஹோ..!?!
எங்கே போனார்கள் ;
இந்த ஊர்க்கடவுளர்கள்..!!!
புலம்பினாள் ;
கத்தினாள் ; கதறினாள் ;
கூவி கூவி அழைத்தாள்..!!
வந்து விழுந்தது மற்றுமொரு குண்டு..!!!
அடங்கியது ஆசை நாயகனின் உயிர்..!!!
கதறினாள் ; கதறினாள் ;
கண்ணீரும் அடங்கியது..!!
இன்னும் கதறினாள் உதிரமும் கொட்டியது ;
வலியின் உச்சமோ உயிர்வரை செல்ல,
ஒரு கையில் கணவனின் கரம் பற்றி ;
மறு கையினால் புணர் உறுப்பில் சிரம் பற்றி ;
பிடுங்கி எடுத்தாள் பிள்ளைக்காரி..!
வீரிட்டு அழுதான் ஆண் பிள்ளை..!
உலர்ந்தது பச்சை உடல் ;
உணர்வற்று மரித்தால் ஈழத் தமிழச்சி..!!!
முல்லிவாய்க்காளின் முட்களுக்கிடையே,
மலர்ந்தது பூ ஒன்று..!!
பல துப்பாக்கி குண்டுகளுக்கிடையில்
துடித்தது புது இதயம்..!!
அங்கே உருவானான்,
புது ஈழத்து போராளி...!!
......மீண்டும் உயிர் கொண்டு...!!!