குழந்தை சுதந்திரம்....

எப்போதும் கவிதை பேசும்
உன் பின்னால் நான் ;
அலை பேசியை எடுத்துக்கொண்டு
அலைகிறேன்..!

உன்னை அழுத்தமாய் பதிவு செய்ய ;
அழகியலாய் புகைப்படம் எடுக்க ;

நிற்க வைத்து பதிவு செய்தேன்
........திரும்பிக்கொண்டாய் ;

மீண்டும் நிற்க வைத்தேன்,
பதிவு செய்தேன் ;
........ஒளிந்துகொண்டாய் ;

இப்படியாய் நீ முகம் சுளித்தாய் ;
விரல் கடித்தாய் ;
விழுந்து விழுந்து எழுந்தாய்..!!!

அத்தனையும் பதிவு செய்தேன் அழகியலாக..! சளைக்கவில்லை மனம் ;
மனம் பொறுக்கவும் இல்லை..!?!

இறுதியாய் என் ஆசையை
உன்னுள் திணித்து மிரட்டலால்
உன்னை பணியவும் வைத்து..!!!

அதில் சிரிக்கவும் வைத்து
எடுத்த புகைப்படத்தில்
அத்தனை ஓர் செயற்கைத்தனம்..!!!

இப்போது என் இதயத்தின் சப்தமெல்லாம்
"குழந்தையை குழந்தையாய் விடுங்கள்"
வேறென்ன சொல்ல ?!!!

எழுதியவர் : isha harinee (21-Mar-12, 5:09 pm)
பார்வை : 213

மேலே