தோழனாய் நீயும் தோழியாய் நானும்

தோழனாய் நீயும் தோழியாய் நானும் இந்த பிரபஞ்சம் எங்கிலும் சுற்றி வர ஆசை....
நான் இருந்தால் நீ ஒளி பெறுவாய் என்றால் உனக்காய் விண்மீனாய் மாறுவேன்
ஒரு நாள் என்றாலும் உன் இரவு தேச பிரபஞ்சத்தில் ஒளி விட்டு உயிர்விட சம்மதம் தோழனே...
கடல் அலைகள் ஒவ்வொருமுறையும் தன தோழன் கரையை சந்திக்க வருகின்றன
ஆனால் அவைகள் கரையை சென்று சேருவதில்லை....
நம் நட்பு அலை,கரை என்று இல்லாமல் என்றும்
உன்னை வந்தடையும் இந்த கவிதைகள் போல் இருக்கவேண்டும்...

எழுதியவர் : மகேஸ்வரி (22-Mar-12, 2:05 pm)
பார்வை : 611

மேலே