"பாரதிக்கு ஒரு கேள்வி"

என் பாட்டா.....
சரிதானா உன் பாட்டு..?
மங்கையின் பிறப்பு
மாதவத்தின் பலனென்றாயே....!
சரிதானா உன் பாட்டு...??

பிறந்த பொழுதே பெற்றவன்
குறிபார்த்து குறைபட்டு போனான்_அவன்
தொலை நோக்கு பார்வை
இடம்பெயர்ந்து போனது
இருபதாவது வருடத்தின்
இருபத்தைந்தை எண்ணி;

பருவம் வந்து குத்தவைத்த பின்
பார்பவர் கண் மேய்சலால்
அவளின் பரிதாப உணர்ச்சிகள்
கண்ணீர்விட்டு கதறுகின்றன;

கிடு கிடு கிழங்கள்
கிளு கிளு கீர்த்தனைகளின்
கிரக்கத்தை எண்ணிக்கொண்டு
கன்னத்தை கிள்ளும் கன்றாவியால்
அவளின் கோபங்கள் செத்து போகின்றன‌
கூச்ச கொலைகளத்திலே......!;

அவளின் கன்னி தன்மைக்குள்
கன்னிவெடி வைக்கப்படுகின்றன‌
உடம்பை தொட்டு உதறும்
காதல் போர்வைக்குள் இருந்த‌
கழிவுகளால்......;

மாலையிட்டவனை மார்பிலே சுமந்து
மாமியார் நாத்தனார் கொடுமைக்கு பணிந்து
கணவன் உறவுகளுக்கு கடைவாய் புன்னகை காட்டி
மறைவான தருணங்களில் தனக்காக அழுகிறாள்

எத்தனை பேருக்கு தெரியும்,
குளியல் அறையில் கொட்டும் நீரில்
அவளின் கண்ணிர் அதிகமென;

வேலை கூடங்களில்
சேலை இடுக்குகளில்
வேறை தேடும்
வேசிகள் கூட்டம்;

பெண்ணை பெற்றாதால்
ஊரான் கண் ஊசியை தடுக்க‌
காவல்காரியாய் கால்கடுக்க நடை;

பிள்ளை தரித்து பெற்றெடுத்து
கைபிடித்து கரைசேர்க்கும் வரை
தூக்கங்களுக்கு தூக்கமருந்து தந்து
தூங்கவைக்க வேண்டும்;
பிள்ளையின் பிள்ளையை
கதை சொல்லி தூங்கவைக்கும் வேலை;

நச்சரிப்புகளுக்கு ரசனையென
பெயரிட்டு தன்னைதானே ஏமற்றி
தனக்கென வாழாத வாழ்க்கையை பெறதான்
மாதவம் செய்ய்ய வேண்டுமோ..?

இப்போது சொல் பாட்டா....
சரிதானா உன் பாட்டு....?

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (22-Mar-12, 3:22 pm)
பார்வை : 223

மேலே