"ஒரு பாலியல் தொழிலாளியின் ஒரு நாள்"
![](https://eluthu.com/images/loading.gif)
அந்த சந்துக்குள்ளே
அவள் இருக்கிறாள்;
அதிகாலை விடிகிறது
அலுப்பிலே அவளுக்கு மட்டும்;
கடன்களால் கரைக்கு வந்தவள்;
கடன் முடித்து காலையுணவு முன்னே,
ஆள்வந்து அடுத்தவளும் இல்லாவிட்டாள்
அதுவும் ரத்தாகி அங்கம் விற்கிறாள்;
மதியம்வரை மாடாய் உழைத்து
மேயவரும் மேனி விரும்பிகளுக்கு
மாடபுறாவாய் மடி கொடுக்கிறாள்;
ஆறுமணிவரைதான் அவகாசம் அவளுக்கு;
அதற்க்குமேல் ஆடையில்லை மேலுக்கு;
அந்தியெல்லாம் இருட்டுக்குள் உறைய,
அதே இருட்டில் ஒதுங்குகிறார்கள்
அதற்காக அவளிடம்,
கடையடைப்பு இல்லை _அவள்
உடை உரிக்கும் வியபாரத்திற்கு
பல"சரக்கு" கடையெல்லாம் மூடும் நேரத்தில்
பாலியல் சரக்கு கடைவிரிக்கிறாள்;
அரசன், ஆண்டி; அரசியல் காட்டுமிராண்டி;
அத்தனை பேருக்கும் அர்த்தராத்திரியில்
அவள் ஆனந்த சிற்றுண்டி;
வந்தவர்களின் தொந்தி
வயிற்றின் மேல் குந்தி
வாசம் பிடித்து வாடகை கொடுத்தபின்
வலியிலே கடையடைக்கிறாள்;
அந்த இருட்டுக்குள்ளே
உரிக்கபட்ட அவள் ஆடைகள்
உடுத்த படுகின்றன
உறைந்த சூரியன்
உதிக்கும் முன்னே..
நம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருநாளும்
எப்படி எப்படியோ துவங்க;
அவளின் அதிகாலையும் துவங்குகிறது;
அடுத்த நாளும் விடிகிறது;
அந்த சந்துக்குள்ளே;
அவளுக்கு மட்டும்
அலுப்பிலே........................;