"கடவுளுக்கு இடமில்லை"
![](https://eluthu.com/images/loading.gif)
இந்த பூலோகத்தில்
கடவுளுக்கு இடமில்லை
மதம் பிடித்த மனிதனுக்கு
அதன் கடவுள் பிடிக்கவில்லையோ..........?
கங்கை முடிந்து
கருநாக கொடியுடுத்திய
காக்கும் கடவுளை
சுடுக்காட்டுக்கு அனுப்பிவைத்தான்_சிலர்
குளிர்மலையில் குடிவைத்தான்;
படைத்தவன் பிரம்மன்
பாவம் என்ன செய்தானோ...........?
பூலோகத்தில் அவனுக்கு இடமில்லை
அழிக்கும் ஆண்டவன் அவனையே
ஆழிக்குள் அழுத்திவிட்டான்
ஆங்கார மனிதன்;
கர்த்தர் ஏசுவை
கல்வாரிமலையில்
கழுவேற்றி கொன்று போட்டான்;
புத்தனுக்கு சித்தம்
கலங்கிவிட்டதென சொல்லி
போதி மரத்தடிக்கு
கூடி துரத்தி விட்டான்
நபிகள் கூட
நரிமனிதர்க்கு பயந்து
இருந்தார் யாரும் புகா
குகையில்.....
கோவன குமரனை
கொடுவனம் சூழ்
மலைக்கு தள்ளிவைத்தான்;
முழுமுதற் கடவுள் என்பதால்
முக கை முன்னவனுக்கு மட்டும்
அரச ஆல மரத்தடி தந்தான்
ஊருக்கு ஊர் எல்லை சாமி
ஒவ்வொரு குலத்திற்கும்
தனிதனி குலசாமி
கொல்லையில் கூட
செய்து வைத்தான்
செக்கல் சாமி_ இதில்
ஒன்றையாவது உனக்குள் காமி
இங்கே கடவுள் மனிதனை
ஆட்டுவிக்கவில்லை
மனிதனால் கடவுளுக்கு தொல்லை
இயற்கை நியதியே
இழுபறியில் இருக்கும் போது
எண்ணிபார் உன் கதியை
கடவுளை இருக்கும் இடத்திலேயே
விட்டு விடு..
அவன் பேர் சொல்லும் கயவரை
தீயிட்டு கொன்றுவிடு
மதம் மடியட்டும்
அது "னி"பட்டு
மறுபிறப்பெடுக்கட்டும்
மனிதமாய்..