"வட போச்சே...."

ஆண்டாண்டு காலமாய்
அலுப்பு தட்டாமல்
வடைசுடுகிறாள் அந்த கிழவி
வாங்குவதற்கு தான் ஆளில்லை

ராத்திரியில் அவள்சுடும்
ரசவடைக்கு
ஏகபட்ட போட்டி
இன்னமும் எங்களூரில்;
என் அம்மா கூட‌
எனக்கும் ஊட்டியிருக்கிறாள்
சோறோடு அவள் வடையையும்
கதையிலே....!

தோசைக்குள்ளே வடைசுடும்
அவள் வீட்டை
அனைவரும் நிகர் என்றனர்
பெண்ணின் முகத்திற்கு;

அர்த்த ராத்திரியில்
அவள் பார்க்காத சல்லாபங்களா....?
ஆனாலும் அவள் வேறுயாரிடமும்
"அதை" பற்றி சொல்வதில்லை;

அவள் காணாமல் போன
இரவுகளில்
அடம்பிடித்து அழுது இருக்கிறேன்
அந்த ஆயாவைகாட்ட சொல்லி
அம்மாவிடம்....

இப்பொழுது கூட‌
விண்வெளி மைய்ய விலாசத்திற்கு
கடிதம் போட்டுள்ளேன்
எனக்கொருவடை வாங்கிதர சொல்லி....

ஆனால் அது கிடைக்கவில்லை
அன்று அமாவாசை என்பதால்.;

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (22-Mar-12, 4:09 pm)
பார்வை : 159

மேலே