கால்கள்...

எத்தனை முறை நடந்திருப்பேன்..!
காடுகளிலும் ; மலைகளிலும் ;
ரோட்டோர அசிங்கங்களில் கூட..!
ஆனாலும் , ஓயவில்லை..!
சிலநேரங்களில் காதலுக்காக ;
பல நேரங்களில் காதலிக்காக ;
உண்மைக்காக சில நேரம்..!
வன்மைக்காக பல நேரம்..!
ஆனாலும் ;
சுயநலத்திற்காக மட்டுமே
அதிக நாட்கள்..!
உதவிக்காக சில நாட்களும் உண்டு..!
இதில் ,
நான் என்னும் நாட்களே அதிகம்..!
முட்களை சுமந்த நாட்களும் உண்டு ;
சுடு மணற்பரப்பில் புதைந்த நாட்களும் உண்டு..!
சகதிகளில் விளையாடியபோதும் ;
சருக்கலாய் தேய்த்த போதும் ;
தாங்கிக்கொண்டாய் என்னை..!
இருந்தும்
அன்புக்காக நடந்த நாட்களே அதிகம்..!
ஆனாலும் வலி மட்டுமே மிச்சமாய் இன்று..!
எத்தனை முறை துன்பப்பட்டாலும்
ஓடிக்கொண்டே நீ..!
நேற்று வரை கம்பீரமாய் நின்ற உன்னை
இன்று மட்டுமே கண்டுகொண்டேன்
ஏன் ?
இன்று அதிகமாய் வலித்தாய் நீ..!

...................என் கால்களாய்...!

எழுதியவர் : isha harinee (23-Mar-12, 12:58 pm)
பார்வை : 212

மேலே