ஈழச்சி கேள்வி...?

அய்யோ...! அப்ப்பா...! அம்ம்மா...!
ஆண்டவா...! என் ஊர்க்கடவுளே...!
எங்கடா..போனீங்க..?!
என் அப்பனும் ஆத்தாளும் மாண்டுபோயினரே..!
ஏன் வரவில்லை தடுக்க..?
என் அண்ணனும் , அக்காளும் , போராடுராங்களே..!
ஏன் வரவில்லை..?
நீ இருக்க..!?
என் தமிழ் சொந்தங்களே..
என் செந்தமிழும் ; பைந்தமிழும் ;
என் ஈடற்ற அமுதத்தமிழும் ;
இன்று அய்யோ..! அப்பா..! அம்மா..!
என்று அலறும் தமிழ் ஆனதே
ஏன்..?
என் தங்கை என் தம்பியுடன் பதுங்குகுழிக்குள் அலறும் சத்தம் கேட்கவில்லையா..!
அய்யஹோ..!
என் நெஞ்சு பிளக்கிறதே..!
ஏன் கேட்கவில்லை உமக்கு..?
அய்யஹோ..!
நான் என்ன செய்வேன் உம்மை தவிர அழைக்க..?!
கையிருந்தும் ;காலிருந்தும் ;
வீரமிக்க மனமிருந்தும்..
கையாலாகதவனாய் ஏன்..?!
அவ்வீரத் தமிழ்நாட்டில்...!?

எழுதியவர் : isha harinee (23-Mar-12, 10:58 am)
பார்வை : 318

மேலே