நன்றி உள்ள ஜீவன் அது
ஹெல்மெட் போடாமல் போன
நாய் மீது பஸ் மோதி அமுக்கி நசுக்கியது
அந்தோ பரிதாபம்
அங்கேயே உயிர் விட்டது நாய்.....!
நன்றி உள்ள ஜீவன் அது
நமக்கு எங்கே போனது புத்தி ?
அவசரமான ஓட்டுனரே.....
அறியவில்லையா ஜீவ காருண்யம்....?
வீட்டில் உன் குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கும்
ஒரு நாய் பொம்மையோடு.......
அதை பார்க்கும்போது உனக்குப் புரியட்டும்
அழகுக் குழந்தை
அதற்குள்ளும்
அருமையான உயிர் வைத்துப் பார்க்கிறது என