கனவு தேசம்
இது
உண்மை
உறங்காத தேசம.
இங்கு
பெண்கள்
போதைபொருள்கள் அல்ல.
இங்கு
கூலிகள்
கொத்தடிமைகள் அல்ல.
இங்கு
மிருகங்கள்
ஊருக்குள்
உலவுவது இல்லை
இங்கு
வாக்குகள்
விலைக்கு இல்லை
இலவசம் வாங்க
யாருமில்லை
இங்கு
காதல்
கல்லறை யாவதில்லை
இங்கு
வங்கி கொள்ளை இல்லை
வழிப்பறி திருடர்களோ
இல்லவே இல்லை
அதனால்
என்கவுன்டர் ஏதுமில்லை
இங்கு
பாலியல் வன்மை இல்லை
தற்கொலை இல்லை
தீவிரவாத தன்மை இல்லை
அதனால்
கொத்து கொத்தாக
கொலைகள் இல்லை
இரவில்கூட
இருள் இல்லை
மின்சாரத்துக்கு
வெட்டு குத்து
காயமில்லை
அட...
இன்னும் நிறைய இல்லைகள்
நிறைய இருக்கு
அதற்குள் என்னை
ஏன் எழுப்பிவிட்டாய்
தூக்கத்திலிருந்து?