உன் நினைவுகள்
நான்
மரணத்தின்
வாசல்வரை
வந்துவிட்டேன்.
ஆனாலும்,
உன் நினைவுகள்
நெஞ்சைவிட்டு
நீங்கவில்லை!
அன்பு பொக்கிஷங்களை
அள்ளித்தந்த
அலிபாபா குகையே!
உன் அன்பை
அசைபோடுகிறேன்
மரணப்படுக்கையில்...
ஆனால்
அருகில் இருந்து
யாரோ சொல்வது
காதில் விழுகிறது...
“பெரிசுக்கு உயிர்
தொண்டையில்
இழுத்துகிட்டு கிடக்கு” என்று.