அரைவேக்காடு ஓவியன்!

நீயொரு
அரைவேக்காடு ஓவியன்!
என் முகத்தில்
எத்தனை சுருக்கங்கள்!
என் கண்கள்
ஒளிரவில்லையே!
என் கன்னங்கள்
நசுங்கிப்போன
கிண்ணங்களா?
பற்கள் இல்லாத
என் வாய்
நீ விளையாடும்
பள்ளங்குழியா?.
என் தலையில்
வெள்ளையடித்த
உன் தூரிகையை
தூரப்போடு!

நீயொரு
அரைவேக்காடு ஓவியன்!

என் முத்து விழாவிற்கு
உன்னிடம்போய்
முகத்தைக் காட்டிய
முட்டாள் நான்!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (25-Mar-12, 7:22 pm)
பார்வை : 335

மேலே