மாய தீர்த்தம்!
உன்னை
பூனை அருந்தினால்
புலிபோல் பாயும்!
புலி அருந்தினால்
பூனைபோல் பதுங்கும்!
நாய் அருந்தினால்
நரிபோல் ஊளையிடும்!
நரி அருந்தினால்
நாய்போல் குறைக்கும்!
மனிதன் அருந்தினால்
மிருகமாய் மாற்றிவிடும்
மதுவே!
நீ ஒரு மாய தீர்த்தம்!