அல்வாவா சிரிக்கிறார் ஆல்வா எடிசன்

வீதியெல்லாம்
விளக்குக் கம்பம்
பகலில் தூங்கி
இரவெல்லாம்
பளிச்சுன்னு
விழித்திருக்கும்
வீடெல்லாம்
வெளிச்சம்
வெளிச்சம்
இப்பவெல்லாம்
எல்லாம் மாறிபோச்சு
இரவிலும் தூங்குது
விளக்குக் கம்பம்
வீடெல்லாம்
ஒரே இருட்டடிப்பு
படிக்கிற மாணவன்
பரிதவிப்பு

அண்ணே உங்க
ஊர்ல என்ன
அரசியல் அல்வாவா ?
வானத்திலிருந்து
சிரிக்கிறார்
ஆல்வா எடிசன்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-12, 10:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 459

மேலே